ஆற்றல் மற்றும் பருவநிலை பற்றிய மாபெரும் பொருளாதார மன்றம்
June 25 , 2022 1243 days 493 0
மத்தியச்சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் பூபேந்தர் யாதவ் இந்த மன்றத்தில் இந்தியா சார்பாக கலந்து கொண்டார்.
காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த மன்றத்தினை அமெரிக்க அதிபர் ஜோசப் பிடன் தொகுத்து வழங்கினார்.
இந்த மன்றமானது எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், பருவநிலை மீதான நெருக்கடியைச் சமாளிப்பதற்கும், அதன் மூலம் 2022 ஆம் ஆண்டில் எகிப்தில் சரம் எல் ஷேக்கில் நடைபெற உள்ள 27வது உறுப்பினர்களின் மாநாட்டிற்கான ஒரு செயல் திட்டத்தினை உருவாக்குவதற்குமான நடவடிக்கைகளை மேம்படுத்தச் செய்வதை ஒரு நோக்கமாகக் கொண்டது.
உலகெங்கிலும் இருந்து 23 நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.