டைம்ஸ் உயர் கல்வி என்ற இதழின் ஆசியப் பல்கலைக்கழக தரவரிசை 2022
June 24 , 2022 1149 days 484 0
டைம்ஸ் உயர் கல்வி என்ற இதழின் 2022 ஆம் ஆண்டு ஆசியப் பல்கலைக்கழக தர வரிசையானது டைம்ஸ் உயர் கல்வி இதழினால் (THE) வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு இத்தரவரிசையில் இடம்பெற்ற 118 நிறுவனங்களுள் ஜப்பான் பல்கலைக் கழகங்கள் அதிகளவில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளன.
ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஒரு பாலஸ்தீனிய பல்கலைக்கழகம் முதல் முறையாக இந்தத் தரவரிசையில் இடம் பெற்றுள்ளது.
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனமானது இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாகத் தொடர்ந்து இடம் பெற்றுள்ளது.
இது 42வது இடத்தில் உள்ளது.
மைசூரிலுள்ள JSS உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகமானது 65வது இடத்திலும், ரோபர் நகரிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 68வது இடத்திலும், இந்தூர் நகரிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 87வது இடத்திலும் உள்ளன.