ஆஸ்திரேலியா - பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்
December 10 , 2021 1439 days 696 0
சீனாவின் பெய்ஜிங்கில் பிப்ரவரியில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஆஸ்திரேலியா தனது தூதுரக அதிகாரிகளை அனுப்பாது.
இந்த நடவடிக்கையின் மூலம், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்காக வேண்டி மேற் கொள்ளப்பட்ட அமெரிக்காவின் ராஜதந்திர புறக்கணிப்பில் தற்போது ஆஸ்திரேலியா இணைந்துள்ளது.
ஜின்ஜியாங்கில் உய்குர் சிறுபான்மையினரை சீனா இனப்படுகொலை செய்வதை அடுத்து, விளையாட்டுப் போட்டிகளைப் புறக்கணிக்கும் முடிவை அமெரிக்கா எடுத்தது.
இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்க அமெரிக்கா எந்த அதிகாரப்பூர்வ அல்லது தூதரக பிரதிநிதித்துவத்தையும் அனுப்பவில்லை என்று இதற்கு அர்த்தம்.
ஆனால், ஒலிம்பிக்கில் பங்கேற்க அமெரிக்க வீரர்களுக்கு அமெரிக்கா அனுமதி அளித்து வருகிறது.
சீனாவில் நடக்கும் முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி இதுவாகும்.
2018 ஆம் ஆண்டு தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் மற்றும் 2020 ஆம் ஆண்டு ஜப்பானில் கோடைகால ஒலிம்பிக் ஆகிய போட்டிகளுக்குப் பிறகு, கிழக்கு ஆசியாவில் நடைபெறும் மூன்று தொடர்ச்சியான ஒலிம்பிக் போட்டிகளில் இது கடைசியாக இருக்கும்.