சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியம் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொலைத் தொடர்புத் துறை ஆகியவை இணைந்து 2021 ஆம் ஆண்டு கூட்டு இணையப் பாதுகாப்புப் பயிற்சியினை மேற்கொண்டன.
இந்தப் பயிற்சியானது இந்தியாவின் முக்கிய வலைதள உள்கட்டமைப்பு நிறுவனங்கள் ஆகியவற்றுக்காக நடத்தப்பட்டது.
முக்கிய வலைதள உள்கட்டமைப்பு என்பது நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு அவசியமான அமைப்புகள், சொத்துகள் மற்றும் வலையமைப்புகள் ஆகியனவாகும்.
இந்தியாவில் இணையப் பாதுகாப்பின் தயார் நிலையை மேம்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.
மேலும், இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிகழ்வுகளுக்கு ஏற்ப செயல்படுதல் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.