பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினரின் வரையறை மதிப்பீட்டுக் குழு
December 3 , 2021 1612 days 646 0
இந்திய அரசானது பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினர் (EWS) குறித்த வரையறையை மதிப்பீடு செய்வதற்கான ஒரு குழுவினை சமீபத்தில் உருவாக்கியது.
இந்தக் குழுவானது அரசு வேலைகள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீட்டின் வரையறை குறித்து ஆய்வு செய்யும்.
இந்தப் பிரிவை நிர்ணயம் செய்யும் வரையறைகளை இக்குழு மதிப்பீடு செய்யும்.
EWS பிரிவை அடையாளம் காண்பதில் பின்பற்றப்படும் அணுகுமுறைகளை இக்குழு ஆய்வு செய்யும்.
இந்தியாவில் EWS பிரிவை அடையாளம் காண்பதற்கான புதிய வரையறையை இந்தக் குழு ஆய்வு செய்து பரிந்துரைக்கும்.