மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியக் கணினி அவசரநிலைச் செயல்பாட்டுக் குழுவானது (CERT-In), சிங்கப்பூரின் இணையவெளிப் பாதுகாப்பு முகாமையுடன் இணைந்து, 13 நாடுகளுக்கான “சினெர்ஜி” என்ற ஒரு இணையவெளிப் பாதுகாப்புப் பயிற்சியினை வெற்றிகரமாகத் திட்டமிட்டு நடத்தியது.
தேசியப் பாதுகாப்புச் சபைச் செயலகத்தின் தலைமையில் இந்தக் குழு இந்தியா தலைமையில் வழி நடத்தப் படுகிறது.
இப்பயிற்சியின் கருத்துரு, "பிணைத்தொகை தொடர்பான தாக்குதல்களை எதிர்க்கச் செய்வதற்கான இணைய நெகிழ்திறன் வலையமைப்பினை உருவாக்குதல்" என்பது ஆகும்.