TNPSC Thervupettagam

குறை தீர்ப்புக் குறியீடு

September 6 , 2022 992 days 452 0
  • 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான குறை தீர்ப்புக் குறியீடானது நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்புத் துறையால் (DARPG) வெளியிடப் பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின் படி, இந்தியத் தனித்துவ அடையாள ஆணையமானது அனைத்து அமைச்சகங்கள்/ துறைகளில் பொதுமக்கள் குறைகளைத் தீர்ப்பதில் முதலிடத்தில் உள்ளது.
  • இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் என்பது 2016 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதியன்று நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ ஆணையமாகும்.
  • இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்குக் கீழ் செயல்படுகிறது.
  • இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவருக்கும் 12 இலக்க ஒரு தனிப்பட்ட அடையாள எண்ணை (ஆதார்) வழங்க இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திற்குக் கட்டளை இடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்