2025 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதியன்று வடக்கு இத்தாலியில் உள்ள போசாக்னோ மீது ஒரு சிவப்பு நிற ELVE ஒளி வட்டம் தோன்றியது.
இந்த ஒளி வட்டம் என்பது தோராயமாக 200 கிலோமீட்டர் பரப்பளவில் பரவி சுமார் 100 கிலோமீட்டர் உயரத்தில் ஏற்பட்டது.
ELVE என்பது மின்காந்த துடிப்பு காரணமாக ஏற்படும் ஒளி உமிழ்வுகள் மற்றும் மிகக் குறைந்த அதிர்வெண் இடையூறுகளைக் குறிக்கிறது.
அவை கீழ் மட்ட அயனி மண்டலத்தில் மின்னல் மூலம் உருவாகும் மின்காந்தத் துடிப்புகளால் ஏற்படுகின்றன.
ELVE ஆனது நாசாவால் நிலையற்ற ஒளிரும் நிகழ்வுகள் (TLE) என வகைப்படுத்தப் பட்டுள்ளன.
பூமியில் ஏற்படும் ELVE நிகழ்வுகளின் சிவப்பு நிறம் ஆனது, வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜன் மூலக்கூறுகளுடன் உமிழப்படும் ஆற்றல் தொடர்பு கொள்வதன் காரணமாக ஏற்படுகிறது.
வடக்கு இத்தாலியின் போசாக்னோவுக்கு மேலே மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டு ELVE ஒளிவட்டங்கள் காணப்பட்டன.