நிதி ஆயோக் ஆனது சமீபத்தில் இந்திய ஆற்றல் தளம் (India Energy Dashboards) பதிப்பு 2.0 என்ற தளத்தை அறிமுகப்படுத்தியது.
இது நாட்டில் பயன்பாடு, விலை நிர்ணயம், உற்பத்தி, ஆற்றல் விநியோகம் தொடர்பான தரவுகளுக்கு ஒரு ஒற்றைச் சாளர அணுகலை வழங்கும்.
இது சௌபாக்யா, PRAAPTI, UJALA மற்றும் வித்யுத் PRAVAH போன்ற சில திட்டங்களிலிருந்தும் தரவுகளை வழங்கும்.
இது மத்திய மின்சார ஆணையம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மற்றும் நிலக்கரிக் கட்டுப்பாட்டாளர் அமைப்பு அகியவற்றிலிருந்துத் தரவுகளை வழங்கும்.
இந்திய ஆற்றல் தளம் பதிப்பு 1.0 ஆனது 2017 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.