TNPSC Thervupettagam

தீர்ப்பாயங்கள் சீர்திருத்தம் (சீரமைப்பு மற்றும் பணி நிபந்தனைகள்) அவசர சட்டம், 2021

April 19 , 2021 1553 days 1879 0
  • இது சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தால் முன்மொழியப் பட்டுள்ளது.
  • இந்த அவசரச் சட்டத்தைக் குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ளார்.
  • இது ஏற்கெனவே இருக்கும் சில மேல்முறையீட்டு அமைப்புகளை கலைக்கச் செய்வதோடு அவற்றின் செயல்பாடுகள் (மேல்முறையீடுகளை விசாரிப்பது போன்ற செயல்பாடுகள்) போன்றவற்றை ஏற்கெனவே இருக்கும் நீதித்துறை அமைப்புகளுக்கு மாற்றச் செய்கிறது.
  • தீர்ப்பாயங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஒரு தேர்தல் மற்றும் தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசால் நியமிக்கப்படுவர் என இது கூறுகிறது.
  • மேலும் இச்சட்டம் அக்குழுவின் உள்ளடக்க உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது இந்தியாவின் தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியால் மேற்கொள்ளப்படும் எனவும் கூறுகின்றது.
  • பதவிக்காலம் – ஒரு தீர்ப்பாயத்தின் தலைவர் 4 வருடங்கள் என்ற ஒரு பதவிக் காலத்தையோ அல்லது அவர் 70 வயதினை அடையும் வரையோ, இதில் எது முன்பாக வருகின்றதோ அது வரையில் அப்பதவியினை வகிப்பார்.
  • ஒரு தீர்ப்பாயத்தின் மற்ற இதர உறுப்பினர்கள் 4 வருடங்கள் என்ற ஒரு பதவிக் காலத்தையோ அல்லது அவர் 67 வயதினை அடையும் வரையோ, இதில் எது முன்பாக வருகின்றதோ அதுவரையில்  அப்பதவியினை வகிப்பர்.
  • இந்த அவசரச் சட்டம், 2017 ஆம் ஆண்டின்  நிதியியல் சட்டத்தின் வரம்பிலிருந்து பின்வரும் தீர்ப்பாயங்கள் / மேல்முறையீட்டு ஆணையங்களை நீக்கியுள்ளது.
    • 1994 ஆம் ஆண்டு இந்திய விமானநிலை ஆணையச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப் பட்ட விமான நிலைய மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்
    • 1994 ஆம் ஆண்டு வர்த்தக முத்திரைச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட மேல்முறையீட்டு மன்றம்
    • 1961 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட முன்கூட்டிய விதிகளுக்கான ஆணையம்
    • 1952 ஆம் ஆண்டின் ஒளிப்பதிவுச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்
  • இந்தத் தீர்ப்பாயங்களில் மக்கள் பெருமளவில் வழக்குத் தொடுப்பவராக இருப்பது இல்லை.
  • 2017 ஆம் ஆண்டின் நிதியியல் சட்டத்தின்படி, ஒரே மாதிரியான செயல்பாட்டைக் கொண்டிருப்பதன் அடிப்படையில் ஏழு தீர்ப்பாயங்கள் கலைக்கப்பட்டதோடு அல்லது ஒன்றோடொன்று இணைக்கப்பட்டதோடு அவற்றின் எண்ணிக்கை 20 என்பதிலிருந்து 19 என்பதாக குறைக்கப்பட்டது.

தீர்ப்பாயங்கள்

  • தீர்ப்பாயம் என்பது ஒரு பகுதியளவு நீதித்துறை சார் அமைப்பாகும்.
  • இது நிர்வாகம் அல்லது வரி தொடர்பான விவகாரங்களைத் தீர்க்கச் செய்வது போன்ற விவகாரங்களைக் கையாள ஏற்படுத்தப்பட்டது.
  • அசலாக அவை அரசியலமைப்பின் ஒரு பகுதியாக தொடங்கப்படவில்லை.
  • 42வது திருத்தச் சட்டம் ஸ்வரன்சிங் குழுவின் பரிந்துரைகளின் பேரில் இந்த விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது.
  • இந்தத் திருத்தம் அரசியலமைப்பில் தீர்ப்பாயங்கள் என்பதைச் சேர்த்ததோடு 323A மற்றும் 323B என்ற இரண்டு சரத்துகளைக் கொண்டிருக்கும் பகுதி XIV-A என்பதையும் அறிமுகப் படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்