தமிழ்நாடு அரசானது, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஈட்டி மரங்கள் (பாதுகாப்பு) சட்டத்தினைப் புதுப்பிக்கவில்லை.
இந்திய ஈட்டி மரங்கள் ஆனது (டால்பெர்ஜியா லாடிஃபோலியா) தமிழ்நாட்டின் நீலகிரி, ஆனைமலை மற்றும் பரம்பிக்குளம் மலைத்தொடர்களில் காணப்படுகின்றது.
இந்தியாவின் வாழ்விடங்களில் இந்திய ஈட்டி மரங்களுக்கு ஏற்றவாறு 17.2% பகுதிகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் உள்ளது.
ஈட்டி மரங்கள் நைட்ரஜன் நிலைப்படுத்தல் மூலம் மண் வளத்தை மேம்படுத்துகின்றன.
அவை பறவை மற்றும் பூச்சிகளின் பல் வகைமையினை ஆதரிப்பதோடு, நீண்டகால கார்பன் உறிஞ்சு பகுதிகளாகவும் செயல்படுகின்றன.
2019 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான சமீபத்திய கள ஆய்வுகள், தமிழ்நாட்டில் 0.1 ஹெக்டேருக்கு 2.85 ஈட்டி மரங்கள் இருப்பதாகக் காட்டுகின்றன.
கர்நாடகா மற்றும் கேரளாவில் 0.1 ஹெக்டேருக்கு 6.19 மற்றும் 5.38 மரங்கள் என அதிக மரங்களின் பரவல் அடர்த்தி பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஈட்டி மரங்களின் எண்ணிக்கையில் இயற்கையான மீளுருவாக்கம் இல்லாமல் முதிர்ந்த, பல ஆண்டுகள் ஆன மரங்கள் அதிகம் காணப் படுகின்றன.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஈட்டி மரக் கன்றுகள் அரிதானவையாகவும் அல்லது இல்லாமலும் உள்ளன.
பாதுகாப்புச் சட்டமானது, 2025 ஆம் ஆண்டில் காலாவதியாகும் வரை அரசாங்க அனுமதியின்றி ஈட்டி மரங்களை வெட்டுவதைத் தடைசெய்தது.
குறிப்பாக நீலகிரி தேயிலைத் தோட்டங்களில் காணப்படும் தனியார் ஈட்டி மரங்கள், சட்டப் பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தில் உள்ளன.
அவற்றின் வாழ்விட மாதிரியாக்கம் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகியவை ஈட்டி மரங்களுக்கான முக்கிய மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அருகி வரும் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் (CITES) சர்வதேச வர்த்தகம் குறித்த மாநாட்டின் இரண்டாவது பின் இணைப்பின் கீழ் இந்திய ஈட்டி மரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த இனமானது, 2018 ஆம் ஆண்டு முதல் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தினால் (IUCN) எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனமாக வகைப்படுத்தப் பட்டு உள்ளது.
2011-12 ஆம் ஆண்டில் இந்தியாவின் கடைசி தேசிய மதிப்பீட்டில் இந்திய ஈட்டி மரங்கள் அச்சுறுத்தலுக்கு அண்மையில் உள்ள இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.