தரங்கம்பாடி டேனியக் கோட்டை
September 4 , 2025
2 days
48
- தரங்கம்பாடியில் உள்ள டேனியக் கோட்டை 1620 ஆம் ஆண்டு டேனிய பிரபு ஓவ் ஜெட் என்பவரால் கட்டப்பட்டது.
- இந்தக் கோட்டையானது 36,410 சதுர அடி பரப்பளவைக் கொண்டது மற்றும் 400 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமையானது.
- டேனியக் குடியேறிகளுக்கு ஒரு தளமாகப் பயன்படுத்தப்பட்ட இந்தக் கோட்டையானது இந்தியாவில் டென்மார்க்கின் காலனித்துவ இருப்பின் அடையாளமாகும்.
- தமிழ்நாடு மாநிலத் தொல்பொருள் துறையானது, இந்தக் கோட்டையின் மறுசீரமைப்பிற்காக 3.63 கோடி ரூபாய் ஒதுக்கியது.
- இந்தக் கோட்டையின் மறுசீரமைப்பு பணிகள் ஆனது, 2023 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் தேதியன்று தொடங்கியது.
- தரங்கம்பாடியில் உள்ள ஆளுநரின் மாளிகை 1793 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
- டேனிய ஆளுநர்களால் பயன்படுத்தப்பட்ட இது, பின்னர் 1845 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கையகப்படுத்தப்பட்டது.
- இந்த இரண்டு மாடி கொண்ட மாளிகை 10,220 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது.
- இந்த மாளிகை அதன் உயரமான தூண்கள், மைய முற்றம் மற்றும் பிரமாண்டமான அரங்குகளுக்கு பெயர் பெற்றது.
- ஆளுநரின் மாளிகையினை மறுசீரமைக்க மொத்தம் 4.33 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது.
- மறுசீரமைப்புப் பணிகள் 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post Views:
48