தமிழக சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத் துறையானது நீலக் கொடி சான்றிதழுக்காக ஆறு கடற்கரைகளைத் தேர்ந்தெடுத்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட கடற்கரைகளில் சென்னை பெருநகரப் பகுதியில் உள்ள திருவான்மியூர், பாலவாக்கம் மற்றும் உத்தண்டி ஆகியவை அடங்கும்.
தூத்துக்குடியில் உள்ள குலசேகரப்பட்டினம் கடற்கரை, விழுப்புரத்தில் உள்ள கீழ்புதுப்பட்டு கடற்கரை மற்றும் கடலூரில் உள்ள சாமியார்பேட்டை கடற்கரை ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கடற்கரையும் மேம்படுத்துவதற்கு 4 கோடி ரூபாய் என மொத்தம் 24 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.
தமிழ்நாடு நிலையான கடல் வளங்கள் மற்றும் கடல்சார்/நீலப் பொருளாதாரம் (TN-SHORE) திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படுகிறது.
நீலக் கொடி சான்றிதழ் பெற 33 சர்வதேச அளவுருக்களுக்கு இணங்க வேண்டும்.
இந்த அளவுருக்கள் ஆனது கடல் நீரின் தரம், சுற்றுச்சூழல் கல்வி, பாதுகாப்பு, சுற்றுலா வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கியது.
மெரினா கடற்கரை, சில்வர் பீச், காமேஸ்வரம் கடற்கரை மற்றும் அரியமான் கடற்கரை ஆகியவை முன்னர் தமிழ்நாடு மாநிலக் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டன.
செங்கல்பட்டில் உள்ள கோவளம் கடற்கரையானது, 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டின் முதல் நீலக் கொடி சான்றிதழ் பெற்ற கடற்கரையாகும்.