February 21 , 2021
1624 days
685
- மத்திய சமுக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது இந்திய சைகை மொழி (Indian Sign Language - ISL) அகராதியின் மூன்றாவது பதிப்பை வெளியிட்டுள்ளது.
- இந்தப் புதிய பதிப்பானது தினசரி உபயோகப்படும் 10,000 சொற்கூறுகளைக் கொண்டிருக்கும்.
- மேலும் இது கல்வி, சட்டம், மருத்துவத் தொழில்நுட்பம், நிர்வாகம் மற்றும் விவசாயச் சொற் கூறுகள் ஆகிய பலவற்றையும் உள்ளடக்கி இருக்கும்.
- ISL அகராதியின் இரண்டாவது பதிப்பானது 6,000 சொற்கூறுகளுடன் 2019 ஆம் ஆண்டில் வெளியிடப் பட்டது.
- இதன் முதலாவது பதிப்பானது 3000 சொற் கூறுகளுடன் 2018 ஆம் ஆண்டில் வெளியிடப் பட்டது.
Post Views:
685