TNPSC Thervupettagam

இந்திய தேசிய காங்கிரசின் 140வது ஸ்தாபன தினம்

December 31 , 2025 7 days 78 0
  • இந்தியத் தேசிய காங்கிரஸ் (INC) அதன் 140வது ஸ்தாபன தினத்தை 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதியன்று கொண்டாடியது.
  • INC ஆனது 1885 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதியன்று ஆலன் ஆக்டேவியன் ஹியூம், இந்தியத் தலைவர்கள் தாதாபாய் நௌரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, பெரோஸ்ஷா மேத்தா மற்றும் கோபால கிருஷ்ண கோகலே ஆகியோரால் நிறுவப்பட்டது.
  • இதன் முதல் அமர்வு பம்பாயில் (மும்பை) உள்ள கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரியில் நடைபெற்றது, மேலும் W. C. பொன்னர்ஜி அதன் முதல் தலைவராக இருந்தார்.
  • ஒத்துழையாமை, சட்ட மறுப்பு, வெள்ளையனே வெளியேறு, மற்றும் பூர்ண ஸ்வராஜ் (1929) போன்ற இயக்கங்கள் மூலம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் INC முக்கியப் பங்கு வகித்தது.
  • சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியாவில் மதச்சார்பின்மை, பாராளுமன்ற ஜனநாயகம், திட்டமிட்டப் பொருளாதாரம் மற்றும் அணிசேரா கொள்கைக்கு INC பங்களித்தது.
  • இந்திய அரசியலமைப்பை உருவாக்கவும் ஜனநாயக நிறுவனங்களை நிறுவவும் இந்தக் கட்சி உதவியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்