TNPSC Thervupettagam

காஷ்மீரில் 2,000 ஆண்டுகள் பழமையான புத்த மதத் தளம்

December 31 , 2025 7 days 36 0
  • ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஜெஹான்போரா கிராமத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான புத்த மதத் தளத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • குஷான் காலத்தைச் சேர்ந்த ஸ்தூபிகள், மடாலயக் கட்டிடங்கள் மற்றும் எஞ்சிய கட்டமைப்புப் பகுதிகள் இந்த அகழ்வாராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளன என்ற நிலையில் அவை ஒழுங்கமைக்கப் பட்ட புத்த மத நடவடிக்கைகளைக் காட்டுகின்றன.
  • குஷான் தலைநகர் ஹுவிஷ்கபுராவுடன் இணைக்கப்பட்ட ஒரு முக்கியமான புத்த மையமாக ஜெஹான்போரா இருந்திருக்கலாம்.
  • இதன் கட்டிடக் கலை அம்சங்கள் காஷ்மீர் மற்றும் வடமேற்குப் புத்த சமயப் பகுதிகளுக்கு இடையிலான கலாச்சார மற்றும் மதத் தொடர்புகளைக் குறிக்கின்ற காந்தார அமைப்புகளை ஒத்திருக்கின்றன.
  • இந்தக் கிராமம் ஆனது, துறவிகள், வர்த்தகர்கள் மற்றும் கருத்துக்களின் இயக்கத்திற்கு உதவுகின்ற, காந்தாரத்தை காஷ்மீருடன் இணைக்கும் ஒரு பழங்கால வர்த்தக மற்றும் யாத்திரை நடைபாதையில் அமைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்