2027ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான 'வீடுவாரியான பட்டியல் தயாரிப்புப் பணிகளானது', அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிலும் 2026 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்தக் கட்டத்தில், வீடுகள், அவற்றில் உள்ள வசதிகள், குடும்ப விவரங்கள் மற்றும் நுகர்வு முறைகள் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும்.
வீடு வீடாகச் சென்று தரவுகளைச் சேகரிக்கும் பணி தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பே, சுயமாகத் தகவல்களைப் பதிவு செய்யும் வசதி வழங்கப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு எனப்படும் இரண்டாம் கட்டப் பணி, 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு கட்டத்தின் போது சாதி குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும்.
இந்தியாவின் முதல் டிஜிட்டல்வழி மக்கள் தொகை கணக்கெடுப்பான இது ஒட்டுமொத்தமாக 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.