TNPSC Thervupettagam

பூச்சிக்கொல்லி மேலாண்மை மசோதா, 2025

January 12 , 2026 9 hrs 0 min 12 0
  • மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், 2025 ஆம் ஆண்டுக்கான பூச்சிக்கொல்லி மேலாண்மை மசோதாவின் வரைவை வெளியிட்டுள்ளது.
  • இந்த மசோதா, 1968 ஆம் ஆண்டு பூச்சிக்கொல்லி சட்டத்திற்குப் பதிலாக அமலுக்கு வரும்.
  • இது இந்தியாவில் பூச்சிக்கொல்லிகளின் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை, சேமிப்பு, பரிமாற்றம் மற்றும் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும்.
  • பூச்சிக்கொல்லிகளுக்கு அளிக்கப்படும் ஒப்புதலைக் கட்டுப்படுத்த ஒரு மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் மற்றும் ஒரு பதிவுக் குழுவை இந்த மசோதா வழங்குகிறது.
  • இது பூச்சிக்கொல்லிகளின் உரிமம், அடையாளக் குறிப்பிடல் மற்றும் டிஜிட்டல் பதிவு ஆகியவற்றை கட்டாயமாக்குகிறது.
  • இதில் பூச்சிக்கொல்லிகளைப் பாதுகாப்பற்ற அல்லது சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவதற்கான தண்டனைகளும் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்