TNPSC Thervupettagam

இந்திய மருந்தக ஆணையம் - WHO அங்கீகாரம்

August 10 , 2026 4 days 72 0
  • இந்திய மருந்தக ஆணையத்தை (IPC) மருந்தியல் கண்காணிப்புக்கான தென்கிழக்கு ஆசியப் பிராந்தியச் சிறப்பு மையம் மற்றும் மருந்துகளின் தரத்திற்கான தொழில் நுட்ப மையமாக உலக சுகாதார அமைப்பு (WHO) அங்கீகரித்துள்ளது.
  • நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய ஒழுங்குமுறை வலைப்பின்னலின் (SEARN) 10வது ஆண்டு கூட்டத்தின் போது இந்த அங்கீகாரம் அறிவிக்கப்பட்டது.
  • உறுப்பு நாடுகளிடையே மருந்து ஒழுங்குமுறை அமைப்புகளை வலுப்படுத்தச் செய்வதற்காக உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய அலுவலகத்தால் (SEARO) 2016 ஆம் ஆண்டில் SEARN நிறுவப்பட்டது.
  • பிராந்தியம் முழுவதும் மருந்து பாதுகாப்பு கண்காணிப்பு, மருந்து தரத் தரநிலைகள் மற்றும் ஒழுங்குமுறை திறன் மேம்பாடு ஆகியவற்றில் இந்திய மருந்தக ஆணையத்தின் பணிகளை இந்த அங்கீகாரம் ஏற்றுக்கொள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்