இந்திய மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்கள் உருவான தினம் - நவம்பர் 01
November 2 , 2018 2459 days 1000 0
கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய 7 இந்திய மாநிலங்கள் நவம்பர் 1 ஆம் தேதியன்று தமது மாநில தினத்தைக் கொண்டாடுகின்றன.
லட்சத் தீவுகள், புதுச்சேரி, அந்தமான் & நிக்கோபர் ஆகிய யூனியன் பிரதேசங்களும் இதே நாளில் தமது உருவான தினத்தைக் கொண்டாடுகின்றன.
கர்நாடகா
இது கர்நாடகாவின் 63-வது வருட மாநில தினமாகும். இத்தினத்தை கர்நாடகாவின் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறக் கொடிகளை ஏற்றி ராஜ்யோத்சவா என்ற விழாவை கர்நாடகா நடத்தியது.
மைசூர் என முதலில் அழைக்கப்பட்ட கர்நாடகாவானது, 1973-ல் கர்நாடகா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கேரளா
கேரள மாநிலம் உருவாக்கப்பட்டு 62வது வருடங்கள் நிறைவு பெறுகிறது.
இது மொழியியல் கோட்பாடுகளுக்குட்பட்டு பிரிக்கப்பட்டது. தற்போதைய கேரளத்தின் எல்லைப்பகுதிகள் 1956ல் நடைமுறைக்கு வந்தன.
ஹரியானா
ஹரியானாவானது நவம்பர் 1, 2018ல் தனது 52வது வருட மாநில தினத்தை கொண்டாடுகிறது. இது முன்னாள் கிழக்கு பஞ்சாப் மாநிலத்திலிருந்து 1966 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம் ஆனது நவம்பர் 1 அன்று தனது 63வது மாநில தினத்தைக் கொண்டாடியது.