இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும் முதல் உள்துறை அமைச்சருமுமான சர்தார் வல்லபாய் படேலின் 143வது பிறந்த நாளான அக்டோபர் 31 அன்று அவரின் 182 மீட்டர் உயர சிலையான “ஒற்றுமைக்கான சிலையை” பிரதமர் திறந்து வைத்தார்.
இந்தச் சிலையானது சுதந்திர தேவி சிலையின் அளவில் இருமடங்கு உயரமுடையதும் உலகின் மிக உயரமான சிலையுமாகும்.
இது 2989 கோடி ரூபாயில் குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் நர்மதா அணையின் 3.2 கி.மீ. கீழ்நிலையில் கட்டப்பட்டுள்ளது.
இந்தச் சிலையானது, பத்மபூஷன் விருது பெற்ற சிற்பியான ராம் வி சுதரால் வடிவமைக்கப்பட்டு லார்சன் & ட்யூப்ரோ மற்றும் மாநில அரசின் நிறுவனமான சர்தார் சரோவர் நர்மதா நிகாம் லிமிடேட் ஆகியவற்றால் கட்டப்பட்டது.
இது சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தில் உள்ள தற்போதைய உலகின் மிக உயரமான வசந்த கால புத்தர் கோவிலை விட 177 அடிகள் அதிக உயரமுடையதாகும்.