2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் பல்பரிமாண வறுமைக் குறியீடானது 0.121 ஆக இருக்கிறது (Multidimensional Poverty Index-MPI). 2006 ஆம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் இது பாதியாகக் குறைந்துள்ளது.
105 வளரும் நாடுகளில் இந்தியா 53வது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் பல்பரிமாண வறுமைக் குறியீடானது உலக சராசரியான 0.159-என்ற அளவை விடக் குறைவாக இருக்கிறது. மேலும் இந்தியாவின் இக்குறியீடானது தெற்காசிய நாடுகளை விடக் குறைவாகவும் பிரிக்ஸ் நாடுகளை விட அதிகமாகவும் (ரஷ்யாவைத் தவிர்த்து) இருக்கிறது.
பல்பரிமாண வறுமைக் குறியீட்டின் மதிப்பானது 0க்கும் 1க்கும் இடையே இருக்கும். இதில் 1 ஆனது அதிக இழப்பு நிலையையும் 0 ஆனது குறைவான இழப்பு நிலையையும் குறிக்கிறது.
10 மோசமான மாவட்டங்கள் மத்தியப் பிரதேசம், உத்திரப் பிதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் உள்ளன (பீமாறு/BIMARU மாநிலங்கள்).
கேரளா, பஞ்சாப், கோவா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் குறைவான பல்பரிமாண வறுமைக் குறியீட்டு மதிப்பைப் பெற்று முன்னிலையில் உள்ளன.
பல்பரிமாண வறுமைக் குறியீடானது வறுமை நிகழ்வுகள் மற்றும் அதிகப்படியான இழப்புகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கணக்கிடுவதாகும்.
இது ஆக்ஸ்போர்டின் வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு முன்னெடுப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (United Nations Development Programme - UNDP) ஆகியவற்றால் கணக்கிடப்படுகிறது.