TNPSC Thervupettagam

இந்திய ரயில்வேயின் நான்கு வழித்தடத் திட்டம்

August 30 , 2026 14 days 94 0
  • ரயில்களின் திறனை அதிகரிக்கவும் நெரிசலைக் குறைக்கவும் இந்திய ரயில்வே துறை தனது உயர் அடர்த்தி வலையமைப்பில் (HDN) சுமார் 11,000 கி.மீ தூரத்தை நான்கு வழித்தடங்களாக மாற்றத் திட்டமிட்டுள்ளது.
  • ஏழு உயர் அடர்த்தி வழித்தடங்கள் ஒட்டுமொத்த ரயில் போக்குவரத்தில் சுமார் 41 சதவீதத்தைக் கொண்டுள்ளன, அதே நேரத்தில் இது ரயில்வே வலையமைப்பில் சுமார் 16 சதவீதம் மட்டுமே ஆகும்.
  • டெல்லி-ஹவுரா, ஹவுரா-சென்னை, சென்னை-மும்பை, மும்பை-டெல்லி, டெல்லி-சென்னை, மும்பை-ஹவுரா மற்றும் டெல்லி-கவுகாத்தி ஆகியன அந்த ஏழு வழித் தடங்கள் ஆகும்.
  • இந்தியாவின் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு (ATP) அமைப்பான கவாச் 4.0, டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-ஹவுரா வழித்தடங்களில் 2,490 கி.மீ தூரத்திற்கு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
  • கவச் 4.0 ஆனது, மேம்படுத்தப்பட்ட தொடர்வண்டி இருப்பிடத் துல்லியம், பெரிய தொடர்வண்டிப் யார்டுகளில் மேம்பட்ட சமிக்ஞைத் தகவல் மற்றும் தற்போதுள்ள மின்னணு இடைப்பூட்டு அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்