இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்கத் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நியமனம்
August 18 , 2020 1913 days 816 0
அமெரிக்கத் தேர்தலானது 2020 ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடுவதற்கான மற்றொரு வாய்ப்பினையும் கொண்டுள்ளார். இவர் எதிர் அணியைச் சேர்ந்தவரான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன் என்பவரை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார்.
ஜோ பிடன் என்பவர் ஒபாமா அதிபராக இருந்த போது அமெரிக்காவின் துணை அதிபராகப் பணியாற்றினார்.
அதிபர் வேட்பாளரான ஜோ பிடன் ஜனநாயகக் கட்சியின் சார்பாக கமலா ஹாரிஸ் என்பவரை துணை அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளார்.
தேசிய அலுவலகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதலாவது பெண் மற்றும் முதலாவது கறுப்பினப் பெண்மணி இவராவார்.