இந்தியக் கடற்படைக்கான குடியரசுத் தலைவரின் நிலையான நிறம் மற்றும் முத்திரை
December 9 , 2022 942 days 390 0
இந்தியக் கடற்படைக்கான குடியரசுத் தலைவரின் நிலையான நிறம் மற்றும் முத்திரை ஆகியவற்றிற்கான புதிய வடிவமைப்பை அறிமுகப்படுத்துவதற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இது இந்தியாவின் மகத்தான கடல்சார் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டுவதோடு, சக்தி வாய்ந்த, திறம் மிக்க, நம்பிக்கை மற்றும் பெருமைமிக்க இந்தியக் கடற்படையை அடையாளப்படுத்துகிறது.
இந்தியக் கடற்படைக்கான குடியரசுத் தலைவரின் நிலையான நிறம் மற்றும் முத்திரையின் முந்தைய வடிவமைப்பு 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 06 ஆம் தேதியன்று உருவாக்கப் பட்டது.
இந்தியக் கடற்படை முத்திரையானது, மாறுபட்ட வடிவமைப்புடைய நங்கூரத்திற்கு பதிலாக தெளிவான நங்கூரத்துடன் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1951 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதியன்று அப்போதையக் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் இந்தியாவின் மூன்று படைகளில் ஒன்றான கடற் படைக்கு President’s Colour வழங்கப்பட்டது.