தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB), இந்தியாவில் உள்ள சிறைச்சாலை நிலவரங்கள் குறித்த 'இந்தியச் சிறைச்சாலை புள்ளிவிவரங்கள் (PSI) 2024' என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டெல்லி 194.6% என்ற அளவில் நாட்டின் மிக உயர்ந்த சிறைச்சாலை ஆக்கிரமிப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது; அங்கு 10,026 கைதிகள் தங்கும் வசதி உள்ள நிலையில் 19,512 கைதிகள் உள்ளனர்.
இந்தியாவில் உள்ள கைதிகளில் பெரும்பகுதியினர் விசாரணைக் கைதிகள் ஆவர்; அதாவது இவர்கள் தங்கள் நீதிமன்ற வழக்குகள் முடிவடைவதற்காகக் காத்திருப்பவர்கள்.
சிறை ஊழியர்களின் பற்றாக்குறை மற்றும் ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் குறித்து இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
கைதிகளில் பலர் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்களாகவும், 10-ஆம் வகுப்புக்கும் குறைவான கல்வித் தகுதி உடையவர்களாகவும் உள்ளனர்.
சிறைகளுக்குள் கல்வி, கணினி வகுப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் மறு வாழ்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதையும் இவ்வறிக்கை குறிப்பிட்டு உள்ளது.