May 11 , 2026
4 days
95
- 2026 ஆம் ஆண்டு முட்டையிடும் பருவத்தில், தமிழ்நாடு கடற்கரையோரம் சுமார் 1.65 லட்சம் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
- தமிழ்நாடு வனத்துறையானது 1,985 ஆமை கூடுகளைக் கண்டறிந்து, சுமார் 2.29 லட்சம் முட்டைகளைப் பாதுகாத்தது.
- ஆமைகளின் உயிரிழப்பு கடந்த ஆண்டின் 1,572-லிருந்து இந்த ஆண்டு 784-ஆக, அதாவது கிட்டத்தட்ட 50% குறைந்துள்ளது.
- சென்னை வனப்பகுதி 656 கூடுகள் மற்றும் 74,143 சேகரிக்கப்பட்ட முட்டைகளுடன் அதிகபட்ச ஆமை கூடுகளைப் பதிவு செய்துள்ளது.
- கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகளின் எண்ணிக்கையில் கடலூர் மாவட்டம் 48,617 குஞ்சுகளுடன் முதலிடம் பெற்றுள்ளது.
- தற்போதைய முட்டையிடும் பருவத்தில் இன்னும் 62,000-க்கும் மேற்பட்ட ஆமைக் குஞ்சுகள் வெளிவர வேண்டியுள்ளது.
Post Views:
95