TNPSC Thervupettagam

இந்தியப் பூங்காக்களில் பல்லுயிர்ப் பெருக்க இழப்பு – IUCN

October 22 , 2025 9 days 69 0
  • IUCN அமைப்பானது மேற்குத் தொடர்ச்சி மலைகள், அசாமில் உள்ள மனாஸ் தேசியப் பூங்கா மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவன தேசியப் பூங்கா ஆகியவற்றை "குறிப்பிடத்தக்க வகையில் கவலைக்குரிய" தளங்களாக வகைப்படுத்தியுள்ளது.
  • இந்தப் பூங்காக்கள் முறையே பூடான் மற்றும் வங்காளதேசம் வரை நீண்டுள்ள எல்லை தாண்டிய பகுதிகளைக் கொண்டுள்ளன.
  • ஆசியாவில் உள்ள 11 பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் "நல்ல நிலையில் உள்ளவை" என்று மதிப்பிடப்பட்ட ஒரே இந்தியத் தளம் சிக்கிமின் கஞ்சன்சங்கா தேசியப் பூங்கா ஆகும்.
  • IUCN உலகப் பாரம்பரியக் கண்ணோட்டத்தின் 4வது அறிக்கையானது, ஆசியாவின் இயற்கை உலகப் பாரம்பரியத் தளங்களில் 30% ஆனது குறிப்பிடத்தக்க வளங்காப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது என்பதைக் குறிப்பிடுகிறது.
  • பருவநிலை மாற்றம் ஆனது தற்போது இந்தத் தளங்களுக்கான முன்னணி அச்சுறுத்தலாக உள்ளது என்பதோடு அதைத் தொடர்ந்து சுற்றுலா மற்றும் ஆக்கிரமிப்பு அயல் உயிரினங்கள் உள்ளன.
  • சாலைகள், இரயில்வே மற்றும் மரம் வெட்டுதல் மற்றும் வாழ்விட அழிப்பு போன்ற மனித நடவடிக்கைகள் பாதுகாக்கப்பட்டப் பகுதிகளுக்குள் பல்லுயிர்ப் பெருக்கத்தின் இழப்புக்கு முக்கியக் காரணங்களாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்