TNPSC Thervupettagam

இந்தியப் பெருங்கடல் மாநாடு 2026

April 15 , 2026 3 days 94 0
  • இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்ட 2026 ஆம் ஆண்டிற்கான 9வது இந்தியப் பெருங்கடல் மாநாடு மொரிஷியஸில் நிறைவடைந்தது.
  • கடல்சார் முக்கியப் பாதைகளில் உள்ள கவலைகளைத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தையும், நிலைத் தன்மைக்கான நம்பகமான கூட்டாண்மைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்தியா வலியுறுத்தியது.
  • 40க்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்புடன் இந்தியா ஃபவுண்டேஷன் அமைப்பால் இந்த மாநாடானது 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இது சாகர் தொலைநோக்குப் பார்வையின் கீழ் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒத்துழைப்புக்கான ஒரு முக்கிய மன்றமாகும்.
  • முக்கிய கடல் வழிகள் மற்றும் பாதைகளைக் கொண்ட இந்த பிராந்தியம், உலகளாவிய வர்த்தகம், எரிசக்தி வழிகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கு முக்கியமானதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்