பசிபிக் தீவுகள் மன்றத்தின் (PIF) உத்திசார் கூட்டாளர் பிரிவில் (Strategic Partner Stream) இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் நடைபெற்ற இந்தியா-FIPIC (இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றம்) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பசிபிக் தீவுகள் மன்றம் (PIF) 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது மற்றும் இதில் 18 உறுப்பினர்கள் உள்ளனர்.
சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், இணைப்பு, தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து பசிபிக் தீவு நாடுகளுடன் இந்தியா விவாதித்தது.
இந்தியா 14 பசிபிக் தீவு நாடுகளில் உள்ள 2,800 வீடுகளுக்கு சூரிய சக்தி மயமாக்கலை நிறைவு செய்துள்ளதுடன், 70 பெண் சூரிய சக்தி பொறியாளர்களுக்குப் பயிற்சி அளித்து ள்ளது.
இந்தியா பிஜியில் 100 படுக்கைகள் கொண்ட அதி நவீன மருத்துவமனையை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன், 12 PIF உறுப்பு நாடுகளுக்கு 20 கடலில் பயணிக்கக் கூடிய ஆம்புலன்ஸ்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.