TNPSC Thervupettagam

திருத்தப்பட்ட உதான் திட்டம் 2026

September 28 , 2026 3 days 66 0
  • இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகமானது மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoUs) கையெழுத்திட்டது, மேலும் திருத்தப்பட்ட உதான் (உடே தேஷ் கா ஆம் நாக்ரிக் - UDAN) திட்டத்தின் கீழ் விமான நிலைய மேம்பாட்டிற்கான சவால் முறை இணையதளத்தை (Challenge Mode Portal for Aerodrome Development) அறிமுகப்படுத்தியது.
  • பிராந்திய விமான சேவைகளுக்கான விமான ஓடுதளங்கள் மற்றும் ஹெலிபேடுகளைப் பரிந்துரைக்க மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை இந்த இணையதளம் அனுமதிக்கிறது.
  • 2016 ஆம் ஆண்டு முதல், உதான் திட்டம் 687 வழித்தடங்கள் மற்றும் 95 விமான நிலையங்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவந்துள்ளது, இதன் மூலம் சுமார் 17.1 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர்.
  • அடுத்த பத்தாண்டுகளில் 120 இடங்களைச் சேர்ப்பதையும், கூடுதலாக 4 கோடி பயணிகளுக்குச் சேவை வழங்குவதையும் திருத்தப்பட்ட உதான் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2026–27 முதல் 2035–36 ஆம் ஆண்டு வரையிலான காலத்திற்கு ₹28,840 கோடி மதிப்பீட்டில், தற்போது பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளங்களிலிருந்து 100 விமான நிலையங்களையும் 200 நவீன ஹெலிபேடுகளையும் மேம்படுத்த இத்திட்டம் திட்டமிட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்