TNPSC Thervupettagam

இந்தியா-இங்கிலாந்து முக்கிய தாதுக்கள் கண்காணிப்பகம்

June 10 , 2026 15 hrs 0 min 29 0
  • இந்தியாவும் இங்கிலாந்தும் இணைந்து புதுடெல்லியில் 'இந்தியா - இங்கிலாந்து முக்கிய தாதுக்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலி கண்காணிப்பகத்தை' தொடங்கின.
  • இந்த கண்காணிப்பகமானது TEXMiN (ஆராய்ச்சி மற்றும் சுரங்க அறக்கட்டளையில் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு), இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (இந்திய சுரங்கப் பள்ளி) தன்பாத் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டு முன்னெடுப்பாகும்.
  • இது இந்தியா - இங்கிலாந்து தொழில்நுட்பப் பாதுகாப்பு முன்னெடுப்பின் கீழ் உருவாக்கப் பட்டது மற்றும் இந்தியா - இங்கிலாந்து தொலைநோக்குப் பார்வை 2035 செயல்திட்டத்துடன் ஒத்துப்போகிறது.
  • இந்த தளம் உலகளாவிய முக்கிய தாது விநியோகச் சங்கிலிகளைக் கண்காணித்து, ஆபத்துகள், தடங்கல்கள் மற்றும் சந்தைப் போக்குகளைக் கண்டறியும்.
  • லித்தியம், கோபால்ட், நிக்கல் மற்றும் அரிய மண் தனிமங்கள் போன்ற தாதுக்களுக்கான பாதுகாப்பான அணுகலை உறுதி செய்வதன் மூலம், இது இந்தியாவின் தேசிய முக்கிய தாதுக்கள் திட்டத்திற்கு ஆதரவளிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்