உலக வர்த்தக அமைப்பில் (WTO), ஐக்கிய பேரரசின் (UK) எஃகு பாதுகாப்பு நடவடிக்கைகளை எதிர்ப்பதில் இந்தியா பல நாடுகளுடன் இணைந்துள்ளது.
ஐக்கிய பேரரசானது (UK), எஃகு இறக்குமதியில் ஒதுக்கீட்டு வரம்பிற்கு மேல் 25% வரியையும், சுங்கவரி-விகித ஒதுக்கீடுகளையும் விதித்தது.
2018 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட அமெரிக்காவின் (US) பிரிவு 232 எஃகு வரிகள் மற்றும் உலகளாவிய எஃகு அதிகப்படியான உற்பத்தித் திறனைத் தொடர்ந்து, இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
UK-வின் இந்தப் புதிய எஃகு கட்டுப்பாடுகளானது, இந்தியா-UK விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை (CETA) பாதிக்கலாம் என்று இந்தியா கூறியுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை என்பது, திடீர் இறக்குமதி அதிகரிப்பிலிருந்து உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிகளின் கீழ் அனுமதிக்கப் படும் ஒரு தற்காலிக வர்த்தகக் கட்டுப்பாடாகும்.