இந்தியா முழுவதும் மின்சார வாகன மின்னேற்றும் நிலையங்கள் 2026
August 17 , 2026 16 hrs 0 min 43 0
இந்த ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி 6,805 மின்சார வாகன மின்னேற்றும் நிலையங்கள் (EVCS) நிறுவப்பட்டுள்ள நிலையில், மின்சார வாகன (EV) மின்னேற்றும் உள் கட்டமைப்பில் கர்நாடகா இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
இது கனரகத் தொழில்கள் அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி தெரிய வந்து உள்ளது.
கர்நாடகா, மகாராஷ்டிராவை விட சற்றே பின்தங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் 3,839 மின்னேற்றும் நிலையங்களும், தெலங்கானாவில் 3,739 நிலையங்களும், கேரளாவில் 3,399 நிலையங்களும் உள்ள நிலையில் ஆந்திரப் பிரதேசத்தில் 1,976 நிலையங்களும், கோவாவில் 314 நிலையங்களும் உள்ளன.
மின்சார வாகன மின்னேற்றும் நிலையங்களை அமைப்பது உரிமம் பெறாத ஒரு செயலாகும் என்பதோடு இது, 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மின்சார அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, தனியார் நிறுவனங்கள் மின்னேற்றும் நிலையங்களை நிறுவ அனுமதிக்கிறது.
2024-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பிரதம மந்திரி இ-டிரைவ் திட்டம் (PM E-DRIVE Scheme), கனரகத் தொழில்கள் அமைச்சகத்தின் (MHI) ஒரு முக்கிய முன்முயற்சியாகும்.
பிரதம மந்திரி இ-டிரைவ் திட்டத்தின் கீழ், மத்திய அமைச்சகங்கள், மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் பொதுத்துறை நிறுவனங்கள் பொது மின்னேற்றும் நிலையங்களுக்கான முன் மொழிவுகளைச் சமர்ப்பிக்கத் தகுதி பெற்றுள்ளன.
அவர்கள் தாங்களாகவே வசதிகளை நிறுவி இயக்கலாம் அல்லது சார்ஜ் பாயிண்ட் ஆபரேட்டர்களை ஈடுபடுத்தலாம்.
தேசிய மின்சார வாகனப் போக்குவரத்து இயக்கத் திட்டம் (NEMMP 2020), இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டையும் உள்நாட்டு உற்பத்தியையும் விரைவு படுத்துவதற்கான ஒரு மூலோபாய வரைபடத்தை கோடிட்டுக் காட்டுகிறது.
இது எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் தூய்மையான, நிலையான போக்குவரத்தை ஊக்குவித்தல் ஆகிய இரட்டை நோக்கங்களைக் கொண்டுள்ளது.
NEMMP 2020 கட்டமைப்பின் கீழ், மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக 2015-ஆம் ஆண்டில் FAME இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டம் வாங்குபவர்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்கியது, சார்ஜிங் உள் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் உற்பத்திக்கும் ஆதரவளித்ததுடன் இதன் முதல் கட்டம் 2019 ஆம் ஆண்டு மார்ச் வரை தொடர்ந்தது, அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டது.
இ-அம்ரித் கருவி ஒருவரின் இருப்பிடத்தின் அடிப்படையில் சார்ஜிங் நிலையத்தைக் கண்டறிய உதவுகிறது.