TNPSC Thervupettagam

புதிய 11 சர்வதேச துறைமுகங்கள்

August 17 , 2026 16 hrs 0 min 48 0
  • இந்திய அரசின் கீழ் உள்ள மத்திய உள்துறை அமைச்சகம் மேலும் 11 சர்வதேச துறைமுகங்களை அறிவித்துள்ளது.
  • இதில் 9 தரைவழித் துறைமுகங்களும் 2 விமான நிலையங்களும் அடங்கும்.
  • புதிதாக சேர்க்கப்பட்ட தரைவழித் துறைமுகங்கள் தர்ரங்கா, கெடே, கோஜடங்கா, ஹரிதாஸ்பூர், ஜெய்கான், டாவ்கி, மோரே மற்றும் அட்டாரி (சாலை) ஆகும், இவற்றுடன் போபால் மற்றும் திருப்பதியில் உள்ள விமான நிலையங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இது மின்னணு விசாவின் நன்மையையும் பயன்பாட்டையும் மேலும் மேம்படுத்தும்.
  • இந்தியா ஏறக்குறைய 95% மின்னணு விசா விண்ணப்பங்களை 72 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் வழங்குகிறது.
  • மின்னணு விசா வைத்திருக்கும் வெளிநாட்டினர் நுழைவதற்கான சர்வதேச துறைமுகங்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 88 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்திய விசா நடைமுறையை, குறிப்பாக சுற்றுலா விசா நடைமுறையை தாராளமய மாக்கவும் எளிமையாக்கவும் எடுக்கப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை, மின்னணு விசா வசதியை அறிமுகப்படுத்தியதாகும்.
  • மின்னணு பயண அங்கீகாரத்துடன் (ETA) கூடிய மின்னணு விசா வசதி, 43 நாடுகளின் குடிமக்களுக்காக 2014-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்த வசதி தற்போது 172 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்குக் கிடைக்கிறது.
  • இந்தியா இப்போது சுமார் 78 சதவிகித விசாக்களை மின்னணு விசாக்களாக வழங்குகிறது.
  • மலையேற்றம் மற்றும் கப்பல் பயணங்களுக்கான குழு விசாக்கள் உட்பட, 17 துணைப் பிரிவுகளின் கீழ் மின்-விசா தற்போது கிடைக்கிறது.
  • பாகிஸ்தான் கடவுச்சீட்டு வைத்திருக்கும் அல்லது பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சர்வதேசப் பயணிகளுக்கு மின்-விசா வசதி இல்லாததால், அவர்கள் இந்தியத் தூதரகத்தில் வழக்கமான விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்