விரிவான உத்திசார் கூட்டணியின் 10-வது ஆண்டு விழாவின் போது வியட்நாம் அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்தார்.
இந்தியா மற்றும் வியட்நாம் தங்களது உறவை "மேம்படுத்தப்பட்ட விரிவான உத்திசார்க் கூட்டணி" நிலைக்கு உயர்த்தின.
இரு நாடுகளும் 2030-ஆம் ஆண்டுக்குள் 25 பில்லியன் அமெரிக்க டாலர் இருதரப்பு வர்த்தக இலக்கை நிர்ணயித்துள்ளன.
சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை ஆதரிப்பதற்காக இந்தியாவின் இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்னெடுப்பில் (IPOI) வியட்நாம் இணைந்தது.
பாதுகாப்பு, டிஜிட்டல் பணம் செலுத்துதல், அரிய மண் தாதுக்கள், சுகாதாரம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தங்களில் இந்தியாவும் வியட்நாமும் கையெழுத்திட்டன.
தென் சீனக் கடலில் ஐக்கிய நாடுகள் கடல் சட்ட ஒப்பந்தத்தின் (UNCLOS 1982) கீழ் கப்பல் போக்குவரத்து சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் சர்ச்சைகளைத் தீர்ப்பதை இரு நாடுகளும் ஆதரித்தன.