இந்தியாவால் அர்ப்பணிக்கப்பட்ட முதல் முதலீட்டு நிதி
May 19 , 2018 2632 days 976 0
சீன அரசாங்கத்தால் நடத்தப்படும் முன்னணி வங்கியான சீன தொழில்துறை மற்றும் வணிக வங்கி (The Industrial and Commercial Bank of China - ICBC) இந்தியாவால் அர்ப்பணிக்கப்பட்ட சீனாவின் முதல் முதலீட்டு நிதியை தொடங்கியுள்ளது.
ICBC கிரடிட் சுசீ இந்திய சந்தை நிதி என இந்நிதிக்கு பெயரிடப்பட்டுள்ளது. ICBC ஆனது 3.6 டிரில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் உலகின் மிகப்பெரிய வங்கியாக திகழ்கிறது.
ICBC கிரடிட் சுசீ இந்திய சந்தை நிதியானது, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலுள்ள 20க்கும் மேற்பட்ட பரிமாற்றங்களில் பட்டியலிடப்பட்டுள்ள பரிமாற்று வர்த்தக நிதியத்தில் முதலீடு செய்யும். இந்த முதலீடுகள் இந்திய சந்தையை அடிப்படையாகக் கொண்டது.
இந்த நிதியானது, சீன முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வழிமுறையை ஏற்படுத்தித் தருவதோடு முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச தொடக்க நிலைக்கான (Low Threshold) சிறந்த வழியையும் ஏற்படுத்தித் தருகிறது.