அமேசான், ஆசியன் பெயின்ட்ஸ் மற்றும் டாடா ஆகியவை 2021 ஆம் ஆண்டில் தொழில் நுட்பம், FMCG அல்லாத மற்றும் FMCG (Fast-Moving Consumer Goods/அதிகம் விற்பனை செய்யப் படும் நுகர்வுப் பொருட்கள்) பிரிவுகளில் இந்தியாவின் அதிகப் பயன்பாடு கொண்டுள்ள தயாரிப்புகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இது கன்தார் சோவ்ஸ் (Kantar shows) எனப்படும் ஒரு நுண்ணறிவு மற்றும் ஆலோசக நிறுவனத்தினால் சமீபத்தில் வெளியிடப்பட்ட பிரான்ட்ஸ் இந்தியா (BrandZ India) என்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொழில்நுட்பப் பிரிவில் அமேசான், உணவு விநியோகத் தளமான சொமாட்டோ, கூகுளின் யூடியூப், உணவு விநியோகத் தளமான ஸ்விகி மற்றும் வால்மார்டின் ஃபிளிப்கார்ட் ஆகியவை உள்ளன.
FMCG அல்லாத பிரிவில், ஆசியன் பெயின்ட்ஸ், ஜியோ, சாம்சங், எம்ஆர்எஃப், டாடா ஹவுசிங் மற்றும் ஏர்டெல் ஆகியவை உள்ளன.
FMCG பிரிவில் டாட்டா டீ, சர்ஃப் எக்செல், தாஜ் மஹால், மேகி, பாராசூட், பிரிட்டானியா ஆகியவை உள்ளன.
2020-21 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் அதிகப் பயன்பாடுகளைக் கொண்டுள்ளத் தயாரிப்புகளுக்கான கன்தார் பிராண்ட்ஸ் தரவுத் தளமானது 418 தயாரிப்புகளின் தகவல்களை உள்ளடக்கியது.