இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு நிறுவனமானது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்தியப் பழங்குடியின ஆதி மகோத்சவத்தில் இந்தியப் பழங்குடியினர் மாநாட்டினை ஏற்பாடு செய்தது.
இந்த மாநாடானது உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுத்தல் எனும் பிரதமரின் ஒரு கொள்கைக்கு ஏற்ப ஏற்பாடு செய்யப்பட்டது.
சுயச் சார்புடைய இந்தியாவை உருவாக்கவும் பழங்குடியினர் குறித்த வளமானப் பாரம்பரியத்தை சர்வதேச மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தவும் வேண்டி இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.