TNPSC Thervupettagam

இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவினங்கள் பற்றிய ஆய்வு

July 26 , 2022 1057 days 465 0
  • நிதி ஆயோக் அமைப்பானது இந்தியப் புத்தாக்கக் குறியீட்டினைச் சமீபத்தில் வெளியிட்டது.
  • இது மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு அவற்றின் புத்தாக்கச் செயல்பாடுகளின் அடிப்படையில் தரவரிசைகளை வழங்குகிறது.
  • நிதி ஆயோக் அமைப்பின் 2021 ஆம் ஆண்டு இந்தியப் புத்தாக்கக் குறியீட்டின் படி, இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மொத்தச் செலவினம் உலகிலேயே மிகக் குறைவானதாக உள்ளது.
  • இந்தியா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக மக்கள் தொகையில் ஒருவருக்கு தலா 43 அமெரிக்க டாலர்கள்  என்ற அளவில் செலவிடுகிறது.
  • ரஷ்யா தலா 285 அமெரிக்க டாலர்கள், பிரேசில் 173 அமெரிக்க டாலர்கள், மலேசியா 293 டாலர்கள் என்ற அளவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக செலவிடுகின்றன.
  • பிரேசில் (1.16%) மற்றும் தென்னாப்பிரிக்கா (0.83%) ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும் போதும் இந்தியாவின் செலவினம் குறைவாக உள்ளது.
  • மெக்ஸிகோ (0.31%) நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மொத்தச் செலவினம் (மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதத்தில்) மட்டுமே இந்தியாவை விட குறைவானப் பங்கைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்