சர்வதேச எரிசக்தி முகமையின் சமீபத்திய அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டில் உலகின் 3வது மிகப் பெரிய எத்தனால் சந்தையாக மாறும் ஒரு பாதையில் இந்தியா பயணித்து வருகிறது.
2070 ஆம் ஆண்டில் கார்பன் நடுநிலைமையை அடைவதற்காக தூய எரிசக்தி சூழலை நோக்கி நகர்ந்து வரும் பணிகளை முடுக்கி விட்டுள்ளதால் இந்தியா 2026 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்த ஒரு நிலையைப் பெறும்.
எத்தனால் கலவை வீதத்தினை விரிவுபடுத்தச் செய்வதில் இந்தியா ஒரு “பெரும் முன்னேற்றத்தினை” அடைந்துள்ளதாக சர்வதேச எரிசக்தி முகமை கூறுகிறது.
2017 ஆம் ஆண்டில் பின்பற்றிய எத்தனால் கலப்பு வீதம் 2% ஆகும்.
2021 ஆம் ஆண்டில் இது 8% ஆக உயர்ந்தது.
இதன் மூலம், 2022 ஆம் ஆண்டில் 10% கலப்பு வீதத்தினை இந்தியா எட்டுவது சாத்தியம் ஆகும்.