இந்தியாவின் புதைபடிமம் சாரா எரிபொருள் அடைந்த உச்சம்
January 8 , 2022 1220 days 545 0
2030 ஆம் ஆண்டிற்கு மிக முன்னதாகவே தனது புதைபடிமம் சாராத ஒரு எரிபொருள் இலக்கினை இந்தியா அடைந்துள்ளதாக புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.
21வது பங்குதாரர்கள் மாநாட்டில், இந்தியாவின் ஒட்டு மொத்த ஆற்றல் திறனில் 40% திறனைப் புதைபடிமம் சாரா மூலங்களைச் சார்ந்து உருவாக்கும் என இந்தியா உறுதி பூண்டது.
2030 ஆம் ஆண்டிற்குள் இந்த இலக்கை அடைவதற்கு இந்தியா இலக்கு நிர்ணயித்தது.
ஆனால் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே இந்த இலக்கை இந்தியா எட்டியது.
இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள மொத்த மின்சார உற்பத்தித் திறன் 392.01 GW ஆகும்.
இதில், புதைபடிமம் சாரா எரிபொருள் சார்ந்த ஆற்றல்திறன் 157.32GW ஆகும்.