இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறன் ஆனது, 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, 2,109,655 மெகாவாட் திறனை எட்டியுள்ளது.
அதிகபட்ச உற்பத்தித் திறன் காற்றாலையிலிருந்து பெறப்படுகிறது என்ற நிலையில் இது 1,163,856 மெகாவாட் (55.17%) ஆகும்.
அதைத் தொடர்ந்து சுமார் 748,990 மெகாவாட் (35.50%) சூரிய மின்னாற்றலும், 133,410 மெகாவாட் (6.32%) மாபெரும் நீர் மின்னாற்றலும் உள்ளன.
புதுப்பிக்கத்தக்க வளங்களிலிருந்து இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியானது, 2014-2015 ஆம் நிதியாண்டில் இருந்த 205,608 ஜிகாவாட்-மணிநேர (GWh) என்ற திறனில் இருந்து, 2023-2024 ஆம் நிதியாண்டில் 370,320 GWh ஆக உயர்ந்துள்ளது.
இது 10 ஆண்டுகளில் 6.76% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தைக் குறிக்கிறது.
2023-2024 ஆம் நிதியாண்டில், நிலக்கரி இறக்குமதியானது சுமார் 11.2% அதிகரித்து 262.99 மில்லியன் டன்களை எட்டியது.
இயற்கை எரிவாயு இறக்குமதியானது சுமார் 21% அதிகரித்து 31.8 பில்லியன் கன மீட்டராக உயர்ந்தது.