இந்தியாவின் குடிமை 20 அமைப்பின் பணிக் கட்டுப்பாட்டுக் குழு (C20)
January 29 , 2023 929 days 427 0
G20 அமைப்பிற்கான இலாப நோக்கமற்ற, தன்னார்வ குடிமக்கள் சார்ந்த குழுக்களின் சமூக சேவையினை பிரதிநிதித்துவப்படுத்துகிற வகையில் இந்தியாவின் தலைமைப் பொறுப்பிற்கான அதிகாரப்பூர்வ பணிக் கட்டுப்பாட்டுக் குழுவாகும்.
இது கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அமிர்தபுரி எனுமிடத்தில் தொடங்கப் பட்டுள்ளது.
ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி (அம்மா) C20 கூட்டத்தின் தலைவராக உள்ளார்.
G20 அமைப்பின் அரசு சாராத பிரிவில் ஒன்பது பணிக் கட்டுப்பாட்டுக் குழுக்கள் உள்ளன.
இந்தக் குழுக்கள் G20 நாடுகளின் தலைவர்களுக்குக் கொள்கை சார்ந்த வகையிலான பரிந்துரைகளை வழங்கி அவர்களைத் தகவமைக்க உதவுகின்றன.
வணிகம் 20, குடிமை 20, தொழில்துறை 20, பாராளுமன்றம் 20, அறிவியல் 20, உச்சத் தணிக்கை நிறுவனங்கள் 20, புத்தொழில் 20, ஆலோசனை வழங்கீடு 20, நகர்ப்புறம் 20, பெண்கள் 20 மற்றும் இளைஞர்கள் 20 ஆகியவை இந்த ஒன்பது குழுக்களாகும்.