மத்திய உள்துறை அமைச்சர், ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள அஸ்கா காவல் நிலையத்திற்கு நாட்டின் சிறந்த காவல் நிலையம் என்ற விருதினை வழங்கினார்.
காவல் நிலையங்களைத் தரவரிசைப்படுத்துதல் என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தினால் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கையாகும்.
குற்ற விகிதம், விசாரணை மற்றும் வழக்குகளைத் தீர்ப்பது, உள்கட்டமைப்பு மற்றும் பொதுச் சேவை வழங்கல் போன்ற 165 வெவ்வேறு அளவுருக்களின் அடிப்படையில் காவல் நிலையங்கள் மதிப்பிடப் படுகின்றன.