இந்தியாவின் குறைகடத்தி தொலைநோக்குப் பார்வை 2035-ஐ கோடிட்டுக் காட்டும் "இந்திய குறைகடத்தி தொழில்துறையின் எதிர்காலம்" என்ற அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டது.
2035 ஆம் ஆண்டிற்குள் 120-150 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான குறைகடத்தி மதிப்புச் சங்கிலியை உருவாக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த தொலைநோக்குத் திட்டம் 2035 ஆம் ஆண்டிற்குள் சில்லு/சிப் உற்பத்தியில் 35-50% தற்சார்பு அடைவதையும், உலகளாவிய குறைகடத்தி சந்தையில் 10-13% பங்கீட்டைப் பெறுவதையும் இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த உத்தியானது முன்னோடி (Pioneering), கொள்கை மற்றும் முதலீடு (Policy & Investment), உற்பத்தி (Production), மக்கள் (People) மற்றும் கூட்டாண்மை (Partnership) ஆகிய 5P கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது.
செயற்கை நுண்ணறிவு (AI) சில்லுகள்/சிப்புகள், சிலிக்கான் கார்பைடு (SiC), காலியம் நைட்ரைடு (GaN), மேம்பட்ட பொதிகட்டுதல்/பேக்கேஜிங் மற்றும் குவாண்டம் தொழில்நுட்பங்கள் ஆகியவை முக்கியக் கவனம் செலுத்தும் பகுதிகளாகும்.