குழந்தை இறப்பு விகிதத்தினைக் குறைப்பதில் இந்தியா ஒரு விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது.
2014 ஆம் ஆண்டில் குழந்தை இறப்பு விகிதமானது 1,000 பிறப்புகளுக்கு 45 ஆக இருந்தது.
ஆனால் 2019 ஆம் ஆண்டில் இது 1,000 பிறப்புகளுக்கு 35 ஆகக் குறைந்தது.
‘பாலன் 1000’ தேசியப் பிரச்சாரம் மற்றும் பெற்றோர் சார் செயலி ஆனது மும்பையில் நடைபெற்ற ஆரம்ப குழந்தைப் பருவ மேம்பாட்டு மாநாட்டில் தொடங்கப்பட்டது.
‘பாலன் 1000’ ஆனது குழந்தைகளின் வாழ்க்கையின் முதல் இரண்டு ஆண்டுகளில் அவர்களின் அறிவாற்றல் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது.
இந்தச் செயலியானது பராமரிப்பாளர்களுக்கு குழந்தைகளின் அன்றாட வழக்கங்களில் என்ன செய்ய முடியும் என்பது குறித்த சில நடைமுறை சார்ந்த ஆலோசனைகளை வழங்கி, சந்தேகங்களைத் தீர்க்க உதவும்.
இந்தத் திட்டமானது, ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்ய காரியக்ரம் (RBSK) என்ற திட்டத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.
ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்ய காரியக்ரம் திட்டம் ஆனது குழந்தை பிறந்த முதல் 1,000 நாட்களில் பொறுப்புமிக்க கவனிப்பு மற்றும் கவனம் மிக்க நலன்களை வழங்குவதை உறுதிப்படுத்துகிறது.