குஜராத்தின் சூரத் நகரில் இயற்கை வேளாண்மை குறித்த மாநாடானது ஏற்பாடு செய்யப் பட்டது.
முன்னதாக, ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் குறைந்தது 75 விவசாயிகளை இயற்கை வேளாண்மை முறைக்கு மாறுமாறு பிரதமர் அவர்கள் வலியுறுத்தினார்.
எனவே, சூரத் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்னெடுப்பின் கீழ், ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் 75 விவசாயிகள் அடையாளம் காணப்பட்டு இயற்கை வேளாண்மை முறையை மேற்கொள்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
மொத்தம் 90 வெவ்வேறு தொகுதிகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 41000 விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தற்போது, இந்தியா முழுவதும் இந்த “சூரத் மாவட்டத்தின் மாதிரி இயற்கை வேளாண்மை முறையை” பின்பற்றுமாறுப் பிரதமர் அவர்கள் வலியுறுத்தினார்.