'குழந்தை திருமண முறையிலா இந்தியா' பிரச்சாரம் ஆனது 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.
இந்தப் பிரச்சாரத்தின் கீழ் சத்தீஸ்கரில் உள்ள பலோட் மாவட்டம் நாட்டின் முதல் குழந்தை திருமண முறையிலா மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த மாவட்டத்தில் எந்த குழந்தை திருமண வழக்குகளும் பதிவாகவில்லை என்ற நிலையில் இது சட்ட மற்றும் ஆவணச் சரி பார்ப்புகள் மூலம் சரி பார்க்கப்பட்டது.
சத்தீஸ்கர் மாநில அரசானது, 2028–2029 ஆம் ஆண்டிற்குள் முழு மாநிலத்தையும் குழந்தை திருமண முறையிலா மாநிலமாக அறிவிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.