“State of Healthcare in India – Indian cities through the lens of healthcare” (இந்தியாவின் சுகாதார நலன் – சுகாதார நலன் என்ற பட்டகத்தின் மூலம் இந்திய நகரங்கள்) எனத் தலைப்பிடப்பட்ட ஒரு அறிக்கையானது நாட்டிலுள்ள மிகவும் நகரமயமாக்கப்பட்ட 8 நகரங்களை அவற்றின் சுகாதார நல உட்கட்டமைப்பு வசதிகள் ரீதியில் தரவரிசைப் படுத்தி உள்ளது.
சுகாதாரம் எனும் பரிமாணத்தில் புனே ஆனது மற்ற அனைத்து நகரங்களையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
அகமதாபாத் நகரமானது துப்புரவு மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றில் அதிக மதிப்பினையும் தண்ணீரில் தரம் மற்றும் இருப்பு போன்றவற்றில் குறைவான மதிப்பினையும் பெற்றுள்ளது.
மற்ற 8 முன்னணி நகரங்களுடன் ஒப்பிடுகையில் பெங்களூரு நகரமானது அதிக எண்ணிக்கையிலான மருத்துவமனை படுக்கை வசதிகளைக் கொண்டுள்ளது.
ஹைதராபாத் நகரமானது மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கை மற்றும் எளிதான வாழ்க்கை முறை போன்றவற்றில் குறைவாகவும் காற்றின் தரம், துப்புரவு மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றில் நல்ல மதிப்பினையும் பெற்றுள்ளது.
சென்னை மாநகரமானது காற்றின் தரத்தில் முதலிடத்தில் விளங்கினாலும், இங்கு நிலவும் நீர் பற்றாக்குறை அதன் தரத்தைக் குறைத்து விட்டிருக்கின்றது.
கொல்கத்தா நகரமானது போதுமான மருத்துவமனை படுக்கை வசதிகள் இல்லாததாலும் எளிதான வாழ்க்கை முறை இல்லை என்பதாலும் கடைசி இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளது, ஆனால் காற்றின் தரம் மற்றும் நீர் இருப்பு போன்றவற்றில் நல்ல மதிப்பினைப் பெற்றுள்ளது.
டெல்லி தேசியத் தலைநகர் பகுதியானது போதுமான மருத்துவமனை படுக்கை வசதிகள் இல்லாததாலும், மோசமான காற்றுத் தரத்தினாலும் வாழ்வாதாரக் குறியீட்டில் மோசமான மதிப்பினைக் கொண்டிருப்பதாலும் குறைவான மதிப்பினையே பெற்றுள்ளது.